நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 22 அக்டோபர், 2016

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM... PART 3...கண்ணனை நினை மனமே.. பாகம் 2.. பகுதி 3.

Image result for gajendra moksham

பகவானை அடைய வேண்டுமெனில் மனதை ஒருமைப்படுத்தி, பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்த வேண்டும்.... ஆனால், ஆயிரம் வழிகளில் அலையும் மனதை அடக்கி, பகவான் மேல் திருப்புவது அத்தனை எளிதான செயலா??!!.. மஹாத்மாக்களால் மட்டுமே முடிந்த இந்த விஷயத்தை, மற்றவர்களும் ஓரளவுக்கேனும் சாதிக்கும் பொருட்டே பகவான் துன்பத்தைத் தருகிறான்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

KANNANAI NINAI MANAME.... PART 2. GAJENDRA MOKSHAM. . கண்ணனை நினை மனமே!.. பகுதி...2. கஜேந்திர மோட்சம்.


Image result for gajendra moksham


சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

MY SECOND E-BOOK..என் இரண்டாவது மின்னூல்... 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய, 'திருப்பொன்னூசல்‍' -பொருளுரை'..

இறையருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் என் இரண்டாவது மின்னூல், 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' -பொருளுரை' இன்று வெளியீடு காண்கிறது..அன்பு நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்..

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

KANNANAI NINAI MANAME... IRANDAAM BAGAM....PART 1..GAJENDRA MOKSHAM..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்...பகுதி..1. கஜேந்திர மோட்சம்..

Image result for gajendra moksham images
வணக்கம்!..

'கண்ணனை நினை மனமே'...முதல் பாகம், நரசிம்மாவதாரத்தோடு நிறைவடைந்தது.. இரண்டாம் பாகம், 'கஜேந்திர மோட்ச'த்திலிருந்து,   துவங்குகிறது.. கண்ணனின் கனிவான கருணையை வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு,  தங்கள் அனைவரின் நல்லாதரவும்  இந்தத் தொடருக்கு இருக்குமென்ற நம்பிக்கையில்,  தொடர்கிறேன்..பிழைகள் இருக்குமாயின், தவறாது சுட்டிக் காட்டி, என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME... PART 50...கண்ணனை நினை மனமே!...பகுதி 50.பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).


தூணிலிருந்து வெளிப்பட்ட, பகவானின் நரசிம்ம ஸ்வரூபத்தைக் கண்டதும், ஹிரண்யன், ' இது நிச்சயமாக விஷ்ணுதான்' என்று உறுதி கொண்டு, தன் கதையை எடுத்துக் கொண்டு, தாக்குவதற்கு ஓடினான். பகவான், அவனைத் தம் கரங்களால் பிடித்தார். ஆயினும் அவன் நழுவி விட்டான்!.. அதன் பின்னரும், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் தன்னுடைய விசித்திரமான திறமைகளைக் காட்டியவாறு, மீண்டும் தாக்குவதற்கு ஓடி வந்தான்.