நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 25 பிப்ரவரி, 2012

KOLANGAL ...KOLANGAL..PART 1....கோலங்கள்..... கோலங்கள்.....பகுதி..1....



கோலங்கள் போடுவது எப்படி? என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணிவான வணக்கம். ஆனால் இந்தப் பதிவு கோலங்கள் ஏன் போடவேண்டும் என்று தெரியாத இளம் தலைமுறையினருக்கானது.
கோலங்கள்,பெண்களின் கலா ரசனை மற்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக மாத்திரம் போடப்படுவது அல்ல.கோலங்களில் சக்தி வாய்ந்த எந்திரங்கள் மறைந்திருக்கின்றன. நாள் தோறும் போடவேண்டியவை, பண்டிகைக்காலங்களில் போடவேண்டியவை, ஹோமம்,பூஜைகளின்போது போடவேண்டியவை,சுப காரியங்களில் போடவேண்டியவை என தனித் தனி கோலங்கள் உள்ளன. நம் முன்னோர்கள்,ஒரு காரியம் தொடங்குமுன்,அதை நிறைவேற்றித் தரும் தேவதைகளின் அருட்சக்தியை ஈர்த்து நமக்குத்தரும் வகையில் அத் தெய்வங்களின் எந்திரங்களை எளிய கோலங்களாக மாற்றி, நமக்குத் தந்திருக்கிறார்கள்.ஆகவே, நிகழ்வுக்குப் பொருத்தமான கோலங்கள்,   நினைத்த காரியம் கைகூட வழி வகுக்கும்.மேலும் கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை. தினம் வாசலில் போடுவதால், துர்சக்திகள் அண்டாது. இனி, கோலங்களைப் பார்ப்போம். 
தினமும் வாசலில் போடும் கோலங்கள்:

சின்ன 'ஸ்டார்' வடிவக் கோலம் முதல் ரங்கோலி வரை இவ்வகைக் கோலங்கள் நம் அனைவருக்கும் தெரியும். ஆகவே அடுத்த வகையைப் பார்க்கலாம்.

பூஜையறைக் கோலங்கள்.

ஸ்ரீபாதக் கோலம்
இந்தக் கோலத்தை வரைந்து, பாதங்களைச்சுற்றி, மஞ்சள் குங்குமத்தால், நலங்கு இட்டு, அம்பிகையப் பூஜித்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும்.           

ஐஸ்வர்யக்கோலம்                                                           



ஐஸ்வரியக்கோலமும்,ஹ்ருதயக்கமலமும் போடாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் அரிசி மாவால் ஒரு பலகையில் ஐஸ்வர்யக்கோலம் போட்டு, நடுவில் ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம்,செளந்தர்ய லஹரி பாராயணம் செய்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லப்பாயசம் நிவேதனம் செய்து அம்பிகையை வணங்கி வர திருமணம் கைகூடும். குறிப்பிட்ட வாரங்களுக்கு இப்பூஜையைச் செய்வதாக நேர்ந்து கொண்டு,கடைசி வாரம்,12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நலங்கு இட்டு, இனிப்பு, உடை, வளையல், பொட்டு, கண்மை, மருதாணி அளித்து,சுமங்கலிகளுக்கு (எண்ணிக்கை அவரவர் வசதியைப் பொறுத்தது),உணவு,மஞ்சள் குங்குமம், தாம்பூலம் வழங்கினால், மனதிற்கிசைந்த மணாளன் அமைவார் என்பது நம்பிக்கை...





48 நாட்கள் ஹ்ருதயக் கமலம் கோலத்தை, மனத்தில் வேண்டும் பிரார்த்தனை நிறைவேற வேண்டி பக்தியுடன் பரமன் திருமுன் போட்டு விளக்கேற்றி வந்தால் எண்ணிய யாவையும் கைகூடும்.


ஹ்ருதயக்கமலகோலம்



(ஹ்ருதயக் கமலம் கோலம், புள்ளிகள் வைத்து இணைக்கும் முறை)

ஒரு சுத்தமான பலகையில்,21 தாமரைப் பூக்களை வரைந்து, கனக தாரா ஸ்தோத்திரம் சொல்லி, ஒரு ஸ்லோகத்துக்கு, ஒரு நாணயம் வீதம்(ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்)ஒவ்வொரு பூ மீதும் வைத்து, மஞ்சள், குங்குமம்,பூ தூவி, இயன்ற நைவேத்தியம் செய்துவர, பணக்கஷ்டம் அகலும்.

கனக தாரா ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

Image result for navagraha kolamசஞ்சீவி பர்வதக்கோலம் (ஃ வடிவில் புள்ளிகள் வைத்து, கோடுகளால் இணைத்தால் மலை வடிவம் வரும்.கோலத்தின் அடிப்பகுதியை ஒட்டி ஒரு வால் வரைந்து மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.). ஆஞ்சநேயர் அருளால் சனிப் ப்ரீதி, ராகுப் ப்ரீதி ஏற்படும் .    

ஒவ்வொரு நாளுக்கும் உரிய நவக்கிரகக் கோலங்களை நாள்தோறும் பூஜையறையில் போடலாம்.  அந்தந்தக் கிரகத்துக்குரிய நிறங்களில் போடுவது சிறப்பு. புதன் கிழமைகளில் பச்சை நிறத்தில் புதக்கிரகத்துக்குரிய கோலம் போட்டு, ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி, 'ஹயக்கிரீவப் பிண்டி' எனப்படும் கடலைப்பருப்பு பூரணம் நிவேதனம் செய்து விநியோகித்தால்,ஞாபக மறதி அகலும்.குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.குருப் ப்ரீதி வேண்டுவோர்,வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறக் கோலமிட்டு,நெய் விளக்கேற்றி,கொண்டைக்கடலை சுண்டல்,லட்டு நிவேதனம் செய்து விநியோகிக்கலாம். நவராத்திரியில், தினம் ஒன்றாக ஒன்பது கோலங்களையும் போடலாம்.

வெள்ளிக் கிழமைகளில் குபேரக் கோலமிட்டு,காசு வைத்து,  குபேரஸ்துதி, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லிப் பூஜை செய்து மாதுளம் பழம்,இனிப்பு நிவேதனம் செய்து வர பணக்கஷ்டம் அகலும். காலை ஏழு மணிக்குள் இப்பூஜையைச் செய்வது சிறப்பு. படத்தில் காட்டியபடி காசு வைக்க வேண்டும்.



லக்ஷ்மி அஷ்டோத்திரத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும் .

குபேரன் 108 போற்றிக்கு இங்கு சொடுக்கவும்

பொதுவாக, பூஜையறைக் கோலங்களை கால் மிதி படாத இடத்தில் தான் போடவேண்டும். அரிசி மாவால் தான் போடவேண்டும். செவ்வாய்,வெள்ளி காவி இட வேண்டும்.கோலங்கள் போடும்போது,தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே,முழு கவனத்துடன் போடவேண்டும். இது தெய்வீக அலைகளை நமக்குப் பெற்றுத் தரும். கை அல்லது துணி கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும்.
  
மற்றவை அடுத்த பதிவில்....

வெற்றி பெறுவோம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் : நன்றி, கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

  1. thank u for giving nice explanations about kolams. Instead of drawing a kolam mechanically, hereafter i can draw the kolams meaningfully.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா! அருமை!
    மிகவும் அற்புதமான விசயங்களை அழகாக விளக்கி அருமையாக படைத்து இருக்கிறீர்கள்...
    இன்னும் ஒரு வேண்டுகோள்; இயன்றால் தாங்கள் குறிப்பிடும் ஸ்துதி, ஸ்தோத்திரங்களை காணக் கொடுக்கும் பதிவுகளின் லிங்குகளையும் உங்கள் வலைப்பூவின் தெய்வீக மாலைகளுக்கு இடையில் தனியாகப் பட்டியலிட்டு சேர்த்தால் அதைப் பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும். நன்றி...

    அருமையானப் பதிவு,
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் கூறியபடி திருத்தங்கள் செய்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. madam there are seven kolams for seven days ie., one specific kolam for each day do you know them if yes can u post that also mdam pl.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9 மே, 2013 அன்று PM 3:21

    Thanks lot for your effort madam, very informative blog I ever read. Sundar RAj.G

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா9 மே, 2013 அன்று PM 3:23

    Madam, Thanks for the effort taken, very informative, I very much impressed. Sundar Raj.G

    பதிலளிநீக்கு
  7. எங்கள் குடும்பம் அண்மையில்தான் தில்லியிலிருந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஹைதராபாத்தில் குடியேறியுள்ளோம். இங்கு மங்கலகரமாக காலை எழுந்தவுடன் பலர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டாலும், அதை சுண்ணாம்புக் கட்டியால் இழுத்துப் போடுகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை வீட்டின் முன் அரிசி மாவினால் கோலம் போட்டால் எறும்புகளும், சில புழுப் பூச்சிகளும் அதைத் தின்னும், அதனால் நம் பாவம் சற்று குறையும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நாகரிகம் மிகுந்து, சோம்பேறித் தனம் வளர்ந்து மனிதர்களை இந்த நிலைக்குத் தள்ளி மேலும் பாவ மூட்டையின் பளுவை அதிகரிக்கவா வேண்டும்? உங்கள் கோலப் பகுதியில் இதன் பயன்களையும், அதற்கான சில மேற்கோள்களையும் காட்டி இன்றைய நாகரீக வாதிகளைத் தெளிவாக்க முற்பட இயலுமா?......நன்றி

    பதிலளிநீக்கு
  8. கோலம் போட எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோலமாவோடு அரிசி மாவு கலந்து போடுவேன். விசேச நாட்களில் வண்ணப்பொடி கொண்டும் போடுவேன். ஆனா, கோலம் போடுறதுல இம்புட்டு விசயம் இருக்குன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சாக்பீஸில் கோலம் போடலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படவில்லை.. எறும்புகள் முதலான சிறிய உயிரினங்களுக்கு உணவளிப்பதும் கோலம் போடுவதின் நோக்கங்களுள் ஒன்று. அதனாலேயே அரிசி மாவில் கோலம் போட வேண்டும் என்று சொல்கிறார்கள். சாக்பீஸில் இது நிறைவேறுவதில்லையே....

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..